தல தோனியை சந்தித்த தளபதி விஜய்

   தமிழ் சினிமாவில் தலை சிறந்து விளங்கும் தளபதி விஜய் தல தோனியை சமீபத்தில் சந்தித்துள்ளார். தளபதி விஜய் பீஸ்ட் படத்தின் படப்பிடிப்புக்காக கோகுலம் ஸ்டுடியோவிற்கு வந்திருந்தார். அதே இடத்திற்கு அடுத்த மாதம் துபாயில் தொடங்க இருக்கும் ஐபிஎல் தொடரின் விளம்பரத்திற்கு வந்த தல தோனி விஜயை சந்தித்துள்ளார். தளபதி விஜய் மற்றும் தல தோனி ஆகிய இருவரும் சேர்ந்து பல புகைப்படங்களை எடுத்துள்ளனர். மேலும் பீஸ்ட் படத்தின் இயக்குனரும், படக்குழுவினர் சிலரும் தோனியுடன் சேர்ந்து புகைப்படங்களை எடுத்துள்ளனர். 


Dhoni and Actor Vijay

    விஜய் மற்றும் தோனி எடுத்த சில புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பரவிக் கொண்டிருக்கின்றன. அந்தப் புகைப்படங்களில் விஜய் மற்றும் தோனி ஆகிய இருவரும் ஓரிடத்தில் அமர்ந்து பேசுமாறு இருக்கிறது. இந்த புகைப்படங்களை தளபதி ரசிகர்களும், தல தோனி ரசிகர்களும் வலைத்தளங்களில் அதிக அளவில் பரப்பி வருகின்றனர். மேலும் விஜய் மற்றும் தல தோனியின் ரசிகர்கள் மகிழ்ச்சியின் உச்சத்தில் இருக்கிறார்கள். ஏற்கனவே பீஸ்ட் படத்தின் first look மற்றும் second look வெளியாகி ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றது. இந்த நிலையில் இந்தப் புகைப்படங்கள் ரசிகர்களுக்கு அதிக மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. மேலும் இன்னும் சில நாட்களில் ஐபிஎல் போட்டிகள் தொடங்கும் நிலையில் தோனியின் புகைப்படங்கள் கிரிக்கெட் ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை பெற்றுள்ளது. 

Post a Comment

0 Comments