Republic movie release date announced

1.Republic movie release date announced        

    தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தான் SAI TEJ. இவர் நடிப்பில் வெளியாக உள்ள திரைப்படம்தான் Republic. இப்படத்தை DEVA KATTA என்பவர் இயக்கி உள்ளார். இதில் இவருக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ளார் . இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகை ரம்யாகிருஷ்ணன் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது . இப்படத்திற்கு MANI SHARMA இசையமைத்துள்ளார். இப்படம் தெலுங்கு மொழியில் அக்டோபர் 1ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

2. THALAIVI 2 ANNOUNCED

    இயக்குனர் A.L. விஜய் இயக்கத்தில் வெளியான திரைப்படம் தலைவி. இப்படம் செப்டம்பர் 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. வெளியான சில தினங்களில் நல்ல வரவேற்பினை பெற்றது. முன்னாள் முதல்வர் செல்வி ஜெ. ஜெயலலிதா அவர்களின் வாழ்க்கை வரலாற்றை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டது. இப்படத்தில் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் கங்கனா ரணாவத் நடித்திருந்தார். எம்.ஜி.ஆர் கதாபாத்திரத்தில் அரவிந்த்சாமி நடித்திருந்தார் . படத்தில் ஜெயலலிதாவின் சினிமா வாழ்க்கையை மட்டுமே மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டது இப்படம். அரசியல் வாழ்க்கையை ஒரு சில காட்சிகள் மட்டுமே எடுக்கப்பட்டிருந்தது. இதனை தொடர்ந்து இப்படத்தின் இயக்குனர் A.L. விஜய் தலைவி படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கப் போவதாக அறிவித்துள்ளார். இந்த படத்தில் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் கங்கனா ரணாவத் நடிக்கப் போகிறார் என தகவல் வெளியாகி உள்ளது. இந்த இரண்டாம் பாகமான ஜெயலலிதாவின் அரசியல் வாழ்க்கையை மட்டுமே மையமாகக் கொண்டு எடுக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

3. TATA BUYED AIR INDIA

அமெரிக்கா, ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல நாடுகளுக்கு AIR INDIA என்னும் நிறுவனம் தன் விமான சேவையை அளித்து வருகிறது. கடந்த சில ஆண்டுகளாகவே இந்நிறுவனம் கடும் நிதி நெருக்கடியில் உள்ளது . இதன் காரணமாக மத்திய அரசு AIR INDIA நிறுவனத்தை விற்க 2018ஆம் ஆண்டு முடிவு செய்தது பல்வேறு காரணங்களால் AIR INDIA நிறுவனத்தை விற்க முடியாமல் போனது.தற்போது இந்நிறுவனத்தை வாங்க டாடா குழுமம் முன்வந்துள்ளது. 80 ஆயிரம் கோடிக்கு இந்நிறுவனத்தை வாங்குகிறது. AIR INDIA நிறுவனத்தை வாங்குவதற்கு முன்பு டாடா குழுமம் VISTARA என்ற பெயரில் விமான சேவை நடத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது AIR INDIA நிறுவனத்தை மட்டுமல்லாமல் SPICE JET நிறுவனத்தையும் டாட்டா குழுமம் வாங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Tata buyed air india


Post a Comment

0 Comments